என்னுடைய படத்தில் “அதுபோன்ற காட்சிகள்” அதிகம் இடம்பெற இதுதான் காரணம் – லோகேஷ் பேட்டி.!

lokesh
lokesh

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இதனால் அவரது மார்க்கெட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் கடைசியாக நடிகர் கமலை வைத்து விக்ரம் என்னும் படத்தை எடுத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று அனைத்து இடங்களிலும் சூப்பராக ஓடியது.

அதன் காரணமாகவே வசூல் வேட்டை நடத்தியது இதுவரை மட்டுமே கமலின் விக்ரம் திரைப்படம் 430 கோடி வசூல் அள்ளி முடிவுக்கு வந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பல்வேறு படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதில் முதலாவதாக தளபதி விஜய் உடன் கைகோர்த்து தளபதி 67 படத்தை எடுக்க இருக்கிறார் இவர்கள் இருவரும் இதற்கு முன்பாக மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்தனர்.

அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தளபதி 67 படத்தின் மூலம் இவர்கள் இணைய உள்ளதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் அந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறதாம். மொத்தம் இந்த படத்தில் ஆறு வில்லன்களாம் திரிஷா சமந்தா போன்றவர்களும் நடிக்க இருப்பதாக ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

உங்களது படங்களில் ஏன் போதைப்பொருள் போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெற்று வருகிறது என கேட்டுள்ளனர் அதற்கு பதிலளித்த லோகேஷ் என்னுடைய படத்தில் இதுபோன்ற காட்சிகள் இருக்க காரணம் இதனால்தான் சிறுவர் சீர்திருத்த  பள்ளியில் எவ்வாறு போதைகளுக்கு அடிமையாகி உள்ளார்கள் என்பதை மாஸ்டர் படத்தில் காண்பிக்கப்பட்டது விஜய், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் போன்றவர்கள் போதைக்கு அடிமையாகி எப்படி மீண்டு வருகிறதை  பார்த்தால் மக்கள் அவர்களிடம் இருந்து ஒரு பத்து சதவீதமாவது எடுத்துக் கொள்வார்கள்.

என்பது என்னுடைய நம்பிக்கை.. தளபதி, உலகநாயகன் போன்றவர்கள் இதுபோன்று நடித்தால் கண்டிப்பாக அவரதுகளது ரசிகர்கள் மற்றும் குழந்தைகளிடையே மிகப் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மேலும் விக்ரம் படத்தில் கார்த்தியின் கைதி இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களை வைப்பதற்கும் இதுதான் காரணம் என லோகேஷ் கூறினார் தொடர்ந்து இது போன்ற மக்களுக்கு விழைப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான படங்களை எடுப்பேன் என லோகேஷ் உறுதி அளித்துள்ளார் அந்த வகையில் இது போன்ற காட்சிகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒரு பக்கம் கிசுகிசுக்கபடுகிறது.