தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் இவர் எந்த ஒரு இயக்குனர் இடமும் துணை இயக்குனராக பணிபுரிந்தது கிடையாது தன்னுடைய சொந்த முயற்சியின் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளார் அந்த வகையில் இவர் திரைப்படங்கள் வெற்றி பெற காரணம் என்னவென்று தற்போது பார்ப்போம்.
பொதுவாக ஒரு திரைப்படத்தில் வெற்றி அந்த திரைப்படத்தின் கதையில் கிடையாது திரைக்கதையில் தான் உள்ளது அந்த வகையில் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் எதார்த்தமாகவும் ஈர்ப்பு மிக்கவையாகவும் இருக்க வேண்டியது அவசியம் அவ்வாறு இருந்தால் மட்டுமே திரைப்படம் சலிப்பு இல்லாமல் செல்லும்.
அதேபோல திரைப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் நம்பும்படி ரியாலிட்டியாக இருக்க வேண்டும் இவ்வாறு இருக்கும் பொழுது ரசிகர்கள் அதனை பெரும் அளவு வரவேற்கிறார்கள் அந்த வகையில் நமது இயக்குனர் திரைப்படங்களான மாநகரம் கைதி விக்ரம் ஆகிய திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும்.
மேலும் எந்த ஒரு கதையும் ஒரு நாயகனுக்காக மாற்றி அமைக்காமல் தன்னுடைய கதை இதுதான் என அதற்கு தகுந்தார் போல் கதாநாயகனை நடிக்க வைத்து படமாக்கி உள்ளார் நமது லொகேஷன் அந்த வகையில் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் கூட கமலுக்கு முதல் பாதி படத்தில் 15 நிமிடமே அவருக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதேபோல ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் முக்கியம் அந்த வகையில் அவர்களை தன்னுடைய படத்திற்கு ஏற்றார் போல் நடிக்க வைத்து எடுத்துக்காட்டியிருப்பார் அது மட்டும் இல்லாமல் பெரும்பாலான ரசிகர்களுக்கு பாடல்கள் பிடிப்பது கிடையாது அந்த வகையில் பாடல்கள் வந்தால் வெளியில் செல்வது போன்ற செயல்களிள் ரசிகர்களிடம் உருவாகிவிட்டது அதனை கருத்தில் கொண்டு தன்னுடைய திரைப்படத்தில் பெரும் அளவு பாடல்கள் வைப்பது கிடையாது.
மேலும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கம் திரைப்படங்கள் அனைத்தும் நீளமான கதாபாத்திரம் கொண்ட திரைப்படமாக இருக்கும் அந்த வகையில் அந்த திரைப்படங்கள் ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் இருக்கும் அளவிற்கு திரைப்படத்தை இயக்கி இருப்பார்.
மேலும் படத்திற்கு தேவையான பெரிய நடிகர்களோ சரி சிறிய நடிகர்களோ சரி அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்தால் மட்டுமே அவர்களை நடிக்க வைப்பார் இதன் காரணமாகவே நமது லோகேஷ் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.