கோட்டை விட்ட அனுஷ்கா.. உஷாரான கீர்த்தி சுரேஷ்.! உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்

keerththi
keerththi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் நிலையில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் மாமன்னன் பட ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்ட கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்தது குறித்து கூறியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்த நிலையில் தொடர்ந்து அவருடைய ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தார்கள். மேலும் ஆபரேஷன் செய்து உடலை குறைத்ததாகவும் கூறிவந்த நிலையில் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் மகாநதி. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் தட்டி தூக்கினார். இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை உயர்த்தி இருந்தார். எனவே இந்த படத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு தொடர்ந்து உடற்பயிற்சிகள் மேற்கொண்ட நிலையில் மகாநதி படத்திற்கு பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, பலரும் ஆபரேஷன் செய்து தான் ஸ்லிம்மாக மாறினேன் என கேலி செய்து வந்தார்கள் ஆனால் உண்மையில் 9 மாத கடின உடற்பயிற்சியின் மூலமாக தான் உடல் எடையை குறைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அது மட்டுமல்லாமல் நாளடைவில் உடல் எடையை ரொம்பவே குறைத்து விட்டதால் பல்லி போலவே மாறியதாக விமர்சனம் செய்தார்ககள்.

எனவே உடற்பயிற்சிகளை நிறுத்திவிட்டு யோகா செய்வதை மேற்கொண்டதாகவும் அதன் பிறகு தான் தன்னுடைய உடல் எடையை சரியாக வைத்துக் கொண்டாராம் எனவே மகாநதி படத்திற்கு பிறகு தான் மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திற்கு வந்ததாக சமீப பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

இவ்வாறு அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை ஏற்றிய நிலையில் அதன் பிறகு தற்போது வரையிலும் உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார் ஆனால் இந்த விஷயத்தில் கீர்த்தி சுரேஷ் உஷாராக இருந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.