உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் வெற்றினை தொடர்ந்து தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் கமல் அவர்கள் தான் ஹீரோவாக நடித்திருக்க வேண்டும் ஆனால் அந்த கதையை கேட்ட பிறகு கமலஹாசன் அவர்கள் இந்த படத்தில் நடிக்க முடியாது என விலகி விட்டாராம்.
அதாவது 1993ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தில் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் இயக்குனர் சங்கர். இவர் விஜயின் அப்பா எஸ். ஏ சந்திரசேகரன், பவித்ரன் ஆகியோர்களின் அசிஸ்டன்ட் இயக்குனராக வேலை பார்த்து வந்த சங்கர் ஒரு கட்டத்திற்கு பிறகு படங்களை இயக்கத் தொடங்கினார்.
அந்த வகையில் அர்ஜூன், கவுண்டமணி, மதுபாலா, நம்பியார், வினித் உள்ளிட்ட பலரையும் வைத்து ஜென்டில்மேன் திரைப்படத்தினை உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் டாக்டர் கனவில் இருந்து வரும் அர்ஜுன் அங்கு நடக்கும் சில தவறுகளால் இறுதியாக கொள்ளையனாக மாறி மருத்துவ கல்லூரி கட்டுவதாக முடிவெடுக்கிறார்.
எனவே இதில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது எனவே அர்ஜுனனின் நடிப்பு பலராலும் பாடப்பட்டு இருந்த நிலையில் மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இவ்வாறு ஷங்கரின் முதல் படமே சூப்பர் ஹிட் பெற்றது.
ஆனால் முதலில் ஜென்டில்மேன் படத்தில் கமலஹாசன் அவர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது ஆனால் கமலஹாசன் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் இது குறித்து பேட்டியில் கூறிய கமல் அவர்கள், அதில் சங்கர் தனது முதல் படமான ஜென்டில்மேனில் தன்னை நடிக்குமாறு கேட்டுக் கொண்டார் நானும் அவரை அழைத்து கதை கேட்டேன் ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் நடிக்க மறுத்து விட்டேன் என்றார்.
எனவே இதனை அடுத்து அர்ஜுனுக்கு இந்த கதை பிடித்துப் போனதால் அவர் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். பிறகு இந்தியன் முழு கதையையும் கமலஹாசன் அவர்களிடம் கூற அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம் எனவே சங்கரின் இந்தியன் படத்தில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.