ஒரு நேரத்தில் தொலைக்காட்சி தொடர்களில் மிக பிரபலமாக நடித்து கொடிகட்டி பறந்த பல்வேறு நடிகைகளும் தற்போது என்ன செய்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால் அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அண்ணாமலை சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகையை ஞாபகம் இருக்கிறதா.
இந்த அண்ணாமலை சீரியலில் நடித்து பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா. இவ்வாறுபிரபலமான நமது நடிகை நீண்ட இடைவெளிக்குப்பிறகு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அப்போது நான் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் மட்டும்தான் நடித்துக் கொண்டிருந்தேன் அப்போது என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த சீரியல்தான் அண்ணாமலை சீரியல்.
இவ்வாறு ஒளிபரப்பான இந்த சீரியலை நடிகை ராதிகா அவர்கள்தான் தயாரித்திருந்தார். இந்த சீரியலில் ஐஸ்வர்யா போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இவ்வாறு இதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு களும் கிடைத்த நிலையில்
நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் சினேகாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் அதேபோல டும் டும் டும் என்ற திரைப்படத்தில் கூட ஜோதிகாவின் தங்கையாகவும் நடித்து இருப்பார்.இதனை தொடர்ந்து ஒருசில திரைப்படத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நமது ஐஸ்வர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தன்னுடைய திருமணம் முடிவடைந்த பிறகு எந்த ஒரு துறையிலும் முகம் காட்டாமல் இருந்து வந்த நமது நடிகை சினிமாவை விட்டு விலகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேல் ஆகிவிட்டது என கூறியது மட்டுமல்லாமல் தன்னை பேட்டி எடுக்க வந்ததற்கு மிகவும் நன்றி என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் நடிப்பை விட்டு அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தன் திருமணம் முடிந்த கையோடு துபாய் போக வேண்டிய வேலை இருந்ததன் காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பின்னர் ஒரு குழந்தை பிறந்து விட்டது அவரைப் பார்த்துக் கொள்ளவே என்னால் முடியவில்லை.
இருப்பினும் கனடாவில் சூப்பர் சிங்கர் மாதிரி நிகழ்ச்சி ஒன்றில் நான் தொடர்பாளராக பணியாற்றினேன் ஆனால் தற்போது முன்பை போல என்னால் வேலை செய்ய முடியாததன் காரணமாக எஃப்எம் சேனல் ஒன்றில் vjவாக பணியாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார்.