நான் கர்ப்பமாக இருந்ததை அறிவிக்காமல் இருந்ததற்கு இதுதான் காரணம்..! பாடகி சின்மயி ஓபன் டாக்..!

chinmayi-01

தமிழ் சினிமாவில் பல்வேறு மெகா ஹிட் பாடல்கள் இடம்பெற்று உள்ளது அந்த வகையில் இந்த பாடல்களை எழுதியவர் எவராக இருந்தாலும் இந்த பாடலுக்கு குரல் கொடுத்தவர்கள் அதிக அளவு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

இந்த வகையில் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பல்வேறு ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடகி சின்மயி. இவ்வாறு பிரபலமான நமது பாடகி சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் ஆன விஷயம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வந்தன.

இவர் சமீபத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் ஆனால் இவர் கர்ப்பமாக இருந்தது பல ரசிகர்களுக்கும் தெரியாமல் இருந்து வந்தது. அந்த வகையில் இவருக்கு குழந்தை பிறந்தது என்ற செய்தி வெளி வந்தவுடன் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்கள்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை ஏன் வெளியிடவில்லை என்ற காரணத்தை பாடகி சின்மயி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.  பொதுவாக நமது பாடகிக்கு இரட்டை குழந்தை பிறந்ததை பல ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்களோ கிண்டலும் கேலியும் செய்து வந்தார்கள்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்கள் இரண்டு குழந்தையையும் வைரம் முத்து போல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பாடகி சின்மயி ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே பெண்களை பற்றி பேசும் மாநிலமாக அமைந்துள்ளது.

chinmayi-03
chinmayi-03

அதே போல சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு சாக்கடைகளும் குப்பைகளும் இருக்கும் மாநிலமாக தமிழகம் தான் முதலிடத்தை பெற்றுள்ளது அந்த ஒரே காரணத்தினால் தான் நான் கர்ப்பமாக இருப்பதை சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தேன் என்று ஒரு பதிவினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

chinmayi-02