தமிழ் சினிமாவில் தற்போது விஜய், அஜித் நிகராக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது அதுமட்டுமல்லாமல் தற்போது இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூலை வாரிக் குவிக்கின்றனர் இதனாலே தற்போது முன்னணி நடிகருக்கான அந்தஸ்த்தை பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மதியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர் அறிவுடன் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனலில் பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் சீமா ராஜா, ஹீரோ, மிஸ்டர் லோக்கல், படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அப்போது சிவகார்த்திகேயன் மனம் திறந்து சில விஷயங்களை கூறியிருந்தார். அதாவது அந்த படங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சீமராஜா படத்தைப் பொறுத்தவரை எந்த மாதிரியான படம் என்பதை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை அது மட்டும் அல்லாமல் பிளாஷ்பேக்கில் வரும் கதையின் முக்கியத்துவத்தை ஹீரோ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் வலுவாக சொல்லவில்லை. ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், படம் சூப்பர் ஹிட் அடித்தது இதனால் சீம ராஜா படமும் வெற்றி அடையும் என நம்பி இருந்தது ஒரு வேதனையாக தான் உள்ளது.
இதேபோல் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் பற்றி குறித்து பேசிய சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜேஷ் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அதேபோல் மிஸ்டர் லோக்கல் படம் ஆரம்பத்தில் ஒரு மாற்றம் தெரியும் கிளைமேக்ஷீல் ஒரு மாற்றம் தெரியும் என்று கூறியுள்ளார். இப்படி இந்த மூன்று படங்களும் நல்ல கதைகளை கொண்ட படம் தான் ஆனால் மக்களிடம் எப்படி கொண்டு சேர்த்தார்கள் என்பது தான் ஒரு கேள்வியாக இருந்து வருகிறீர்கள் என்று கூறியுள்ளார்.