தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் தான் இயக்குனர் ஜி வி பிரகாஷ் இவர் நாளடைவில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்ட வேண்டும் என்ற காரணத்தினால் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் ஆரம்பித்துவிட்டார்.
அந்தவகையில் இவர் தமிழில் முதன் முதலாக டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை நிக்கி கல்ராணி.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் ஆனா சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் உருவாக்கிய ராஜவம்சம் திரைப்படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் இவ்வாறு உருவாக்கிய திரைப்படமானது படப்பிடிப்பு முடிந்த நிலையில் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி பேட்டி ஒன்றில் பேசிய போது தன்னுடைய சிறுவயது கனவை பற்றி கூறியுள்ளார் அந்த வகையில் தனது தாயார் சொன்னபடி தனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு ஆனால் புத்தகத்தை பார்த்து பயந்து பின்னர் மாடலிங் துறையில் புகுந்து விட்டேன் என நிக்கிகல்ராணி வெளிப்படையாக பேசியுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் நீங்கள் டாக்டராக ஆகியிருந்தாலும் எங்களுக்கு பரவா இல்லை ஏனெனில் இன்று தியேட்டரில் நாங்கள் கூட்டம் கூட்டமாக உங்களை பார்க்க வந்துகொண்டிருக்கும் இதுவே நீங்கள் டாக்டராக சென்றிருந்தால் மருத்துவமனையில் கூட்டம் கூடி இருப்போம் என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.