இளம் வயதிலேயே இசையமைப்பாளராக விஸ்வரூபம் எடுத்து தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு சிறப்பாக இசை அமைத்தும் பாடல்களை கொடுத்து அசத்தி வருகிறார் அனிருத் இதனால் அவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இவர் இதுவரை அஜித் விஜய் ரஜினி கமல் போன்ற டாப் ஹீரோக்களுக்கு இசையமைத்து வெற்றி கண்டுள்ளார். அனிருத் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது கச்சேரிகளுக்கும் இசை அமைத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டு தான் வருகிறார்.
சினிமாவுலகில் எப்படி வெற்றியை ருசித்து ஓடினாலும் மறுபக்கம் சர்ச்சைகளிலும் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளார். இசையமைப்பாளர் அனிருத் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்கும் போது அந்த நடிகையுடன் நெருக்கமாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்றவை வெளிவந்து இவரது பெயரை டேமேஜ் செய்கின்றனர்.
ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அசத்துகிறார் அனிருத். இப்படி இருக்கின்ற நிலையில் இசையமைப்பாளர் அனிருத் பேட்டி ஒன்று தான் யாரை காதலித்தேன் எதனால் பிரேக்கப் ஆனது என்பது குறித்து வெளிப்படையாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
அப்போது அவர் நான் ஒரு பிரபலத்தை காதலித்தேன் அது உண்மைதான் அந்த பிரபலம் வேறு யாருமல்ல ஆண்ட்ரியா தான் ஆண்ட்ரியாவும் எனக்கும் இடையே காதல் இருந்தது சில காரணங்களால் பிரேக் அப் ஆனது என கூறினார் ஆனால் கேள்வி கேட்ட அந்த நபரோ துருவித் துருவி அனிருத்தை விடாமல் கேள்வியைக் கேட்டார்.
ஒரு கட்டத்தில் நான் ஆண்ட்ரியாவை காதலித்தேன் இருவரும் நன்றாக தான் வந்தோம். ஆனால் அப்போது லவ் போன்றவற்றைப் பற்றி எனக்கு அதிகமாக தெரியாதுஅதேசமயம் அப்போது எனக்கு 19 ஆண்ட்ரியாவுக்கு 25 வயசு வித்தியாசம் வேறு அதிகமாக இருந்ததால் சில காரணங்களால் பிரேக் அப் செய்து கொண்டோம் என கூறினார்.
#Anirudh About Breakup With #Andrea pic.twitter.com/rOCvqqAgoO
— chettyrajubhai (@chettyrajubhai) June 22, 2022