தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் என ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் தான் சரத்குமார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் பிட்னஸ்க்கு பெயர் போனவர் என்று சொல்லலாம்
அந்த வகையில் தனக்கு 67 வயது ஆகியும் என்றும் தனது ஆரோக்கியத்தில் மிகவும் அதிக அளவு அக்கறை உள்ளவராகவும் பிட்டாகவும் இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நம்ம நடிகர் தன்னுடைய இளம் வயதில் மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் நமது நடிகர் தன்னுடைய இந்த வயதில் எப்படி இவ்வளவு பிட்டாக இருக்கிறேன் என்பது பற்றி சமூக வலைதள பக்கத்தில் சில குறிப்புகளை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் இவர் காலையில் எழுந்தவுடன் 10 பாதம் அதனுடன் பிளாக் காபி அல்லது காபி சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவாராம்.
இவ்வாறு உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு மீண்டும் 10 பாதாம் பயிர் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய காலை உணவாக ஒரு இட்லி மட்டும் சாப்பிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 11 மணியளவில் ஒரே ஒரு சப்பாத்தி மட்டும் ஸ்னாக்ஸ் ஆக எடுத்துக் கொள்கிறார்.
அதன் பிறகு மாலை ஆனவுடன் நான்கு மணி அளவிற்கு 10 முந்திரி பயிறுடன் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு விட்டு தனது இரவு உணவாக சியா விதைகளை பாதாம் பால் சேர்த்து சாப்பிடுகிறாராம். இவ்வாறு டயட்டை ஃபாலோ செய்து வருவதன் காரணமாக தான் சரத்குமார் மிகவும் ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார்.
பொதுவாக உணவு கட்டுப்பாடு என்பது நம் எவருக்கும் பொருந்தாத ஒரு செயல் ஏனெனில் நாம் என்னதான் கஷ்டப்பட்டு டயட் ஃபாலோ பண்ணி வந்தாலும் நமக்கு பிடித்த உணவை பார்த்தால் கண்டிப்பாக அதை சாப்பிடும் ஆசை வருவது மட்டும் இல்லாமல் வெளுத்து வாங்கி விடுகிறோம் ஆனால் இந்த வயதிலும் சரத்குமார் எப்படி இப்படி இருக்கிறார் என்பதை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள்.