தமிழ் சினிமா உலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்த அசத்தி நடிகர் சரத்குமார் இவர் இப்பொழுது மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்துள்ளார். படம் வருகின்ற 30 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகவே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் சரத்குமார்.. அப்பொழுது பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்பொழுது மணிரத்தினம் தான் சாத்தியமாகி உள்ளது இந்த படம் வெளியான பிறகு சோழ சாம்ராஜத்தை பற்றி குறித்து அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.
குறிப்பாக அவர்களின் திறமை, கடல் கடந்த வணிகம், கப்பல் போக்குவரத்தில் சிறந்து விளங்கியது உள்ளடவை தெரியவரும். வட இந்தியாவில் இன்னும் கோட்டைகள் உள்ளன ஆனால் இங்கு இல்லை அதே போல் தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட இடங்களை சுற்றுலாத்தலமாக இன்னும் மேம்படுத்த வேண்டும் முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலை அனைவரும் பார்க்கும் இடமாக மாற்ற வேண்டுமென வேண்டுகோள் வைத்தார்.
அதன் பின் ரஜினிகாந்த் பழுவேட்டையராக நடிக்க விரும்பியது குறித்து கேள்விக்கு அவர் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்திருக்கும் ஆனால் உடல் அந்த அளவுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை இருந்தாலும் சினிமாவில் அனைத்தும் சாத்தியம் எனவே ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டையராக நடித்திருந்தால் நன்றாக தான் இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் பேசி அவர் வானம் கொட்டட்டும் படப்பிடிப்பில் தன்னை பார்த்த பிறகு பெரிய பழுப்பேட்டையர் கதாபாத்திரத்திற்கு மணிரத்தினம் தேர்வு செய்தார் என கூறினார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் பொழுது தனக்கு கூச்சமாக இருந்ததாக சரத்குமார் பேசினார் அதை பார்த்துவிட்டு இயக்குனர் மணிரத்தினம் உங்களுக்கு ரொமான்ஸ் வராதா என கேட்க.. அதன் பின் இயல்பாக நடித்த பல சுவாரசியங்களை பகிர்ந்தார்.