தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தற்பொழுது வரையிலும் கவர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஆபாசமாக நடித்ததே இல்லை ஆனால் தற்பொழுது தமன்னா நடித்திருக்கும் ஆபாசமான காட்சிகள் மற்றும் அந்தரங்க காட்சிகள் போன்றவற்றின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சினிமாவிற்கு அறிமுகமாகி 18 வருடங்கள் ஆன பிறகு ஏன் இவ்வாறு ஆபாசமாக நடிக்கிறீர்கள் என்று தொடர்ந்து பல கமாண்டுகளை கூறி வருகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சாந்த் சே ரோஷன் செகரா என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா இதனை அடுத்து தமிழில் கேடி, கல்லூரி போன்ற திரைப்படங்களின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்
அதோடு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இவ்வாறு இதனைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தன்னுடைய காதலரான நடிகர் விஜய் வர்மாவுடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரி 2 என்ற அந்தலாஜி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் தமன்னா சில அந்தரங்கமான காட்சிகளில் நடித்திருக்கும் நிலையில் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி அதிர்ச்சியானார்கள். இப்படிப்பட்ட நிலையில் ‘லஸ்ட் ஸ்டோரி 2’ தொடர் வெளியாவதற்கு முன்பே இவர் நடித்திருக்கும் ஜீ கர்தா வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த படத்தில் நடிகை தமன்னா சில மோசமான காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதனை பார்த்து ரசிகர்கள் தமன்னாவை விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் ஜீ கர்தா-வில் நடிகர் சுஹைல் நய்யாருடன் இணைந்து தமன்னா அந்தரங்க காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ள இந்த தொடர் பள்ளி பருவ காதல் கதையை வைத்து உருவாகியுள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா தான் ஆபாச காட்சிகளில் நடித்ததற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது இயக்குனர் அருணிமா ஷர்மா அந்தரங்க காட்சிகளில் நடிக்கும் பொழுது என்னை எளிதாகவும், வசதியாகவும் உணர வைத்தார். பள்ளி பருவ காலத்து காதல் கதையாக இருப்பதனால் கதைக்க இது அவசியம் இருந்தது.
சுஹைல் நய்யாருடன் இருக்கும் உறவை விளக்கும் கதை ஓட்டத்தை வலுப்படுத்தவும் இது தேவையாக இருந்தது என்று நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார். இந்த தொடரில் லாவண்யா என்ற கேரக்டரில் நடிகை தமன்னா நடித்திருக்கும் நிலையில் இவரை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.