இயக்குனராக சினிமா உலகில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் எஸ் ஜே சூர்யா முதலில் அஜீத்தை வைத்து வாலி என்னும் ஒரு சிறப்பான படத்தை கொடுத்து அஜீத்தை தூக்கி விட்டார் அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடிகர் விஜய்யை வைத்து குஷி என்னும் திரைப்படத்தை எடுத்து அசத்தினார்.
இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் எஸ் ஜே சூர்யாவின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியது அதன்பின் சினிமா உலகில் படங்களை இயக்காமல் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வியை தழுவ ஒருகட்டத்தில் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் சாதிக்க வேண்டுமென முடிவு செய்தார்.
நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தியதால் எஸ் ஜே சூர்யா ஒரு கட்டத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் என்ற படத்தில் வில்லனாக நடித்தார் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நாட்கள் போகப்போக சினிமா உலகில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் கடமையை செய் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார் நாளுக்கு நாள் எஸ் ஜே சூர்யாவின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா தளபதி விஜய் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. விஜய்க்கு இருக்கும் மவுசு மற்றவர்களுக்கு இல்லை என குறிப்பிட்டு உள்ளார் அதாவது நடிகர் விஜயின் திரைப்படத்தை ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் அனைவரும் பார்க்கின்றனர்.
குறிப்பாக குடும்பங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து திரையரங்கில் படத்தைப் பார்க்கின்றனர் இதனால் விஜய்யின் படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின்றன இந்த மவுசு தற்போது விஜய்க்கு மட்டுமே இருக்கிறது வேறு எந்த நடிகருக்கும் இல்லை என அவர் கூறினார்.