CSK கடைசி பந்தில் தோற்க இவர் தான் காரணம்.! உண்மையை அப்பட்டமாக சொன்ன பயிற்சியாளர்.

ஐபிஎல் போட்டியில் மிகவும் விறுவிறுப்பான போட்டியாகவும், பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாக பார்க்கப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டி தான். இந்த இரண்டு அணியும் மைதானத்திற்குள் சென்றால்  எதிரிகள் போல் சண்டை போடுவது போல் இருக்கும் அந்த அளவிற்கு ஒருவருக்கு  ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.

அப்படிபட்ட போட்டி தான் சமீபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போட்டி நடந்தது தொடக்கத்திலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் தனது அதிரடி காட்ட தொடங்கியது.

இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை அணி ஒரு பக்கம் தனது அதிரடி மட்டும் குறைக்காமல் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளியது.

அதுவும் சென்னை அணியில் ஃபேப் டு பிளேசிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு போன்றோர் மூவரும் அரைசதத்தை எட்டினர். அதிலும் குறிப்பாக அம்பத்தி ராயுடு கடைசியில் தனது அசுர பலத்தை காண்பித்து சிக்ஸர்,பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார் இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 218 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் திலிருந்தே ஓரளவு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் ரோஹித் ஷர்மா 35 ரன்களும், டி காக் 38 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அதன்பின் விக்கெட்டுகள் கருணால் பாண்டியா, பொல்லார்ட் இருவரும் சீரான ஆட்டத்தை 2,3 ஓவர்களில் விளையாண்டனர். அதன் பிறகு தனது அதிரடியை காட்டத் தொடங்கினார் குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவை டார்கெட் செய்ய ஆரம்பித்தார் அவரது ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்களை பறக்க விட அதன் பிறகு சிக்சர்களுடன் பவுண்டரிகளும் பறந்தன.

கீரன் பொல்லார்டு 34 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உட்பட 87 ரன்கள் சேர்த்தார் இவர் இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை ஆரம்பத்தில் சில பந்துகள் டாட் செய்து  இருந்தாலும் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்தார் கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் தேவை லாங் ஆன் திசையில் அடித்து 2 ரன்களை எடுத்து வெற்றியை தீர்மானித்தார்.

போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஸ்டீபன் பிளமிங் இடம் இது பற்றி கேட்டு உள்ளனர். கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் தேவை பில்டரை நீங்கள் உள் வட்டத்திற்குள் நிறுத்தியிருக்கலாமே என நிறுத்தவில்லை என கேட்டனர் அதற்கு ஸ்டீபன் பிளமிங்.

பொல்லார்ட் ஒரு மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரர் என்பதையும் தாண்டி பந்தை சிறப்பாக பந்தை பார்த்து அடிக்கக்கூடியவர் அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது யாராலும் கணிக்க முடியாது. அதனால்தான் நாங்கள் லாங் ஆனில் வீரர்களை நிப்பாட்டி இருந்தோம் ஆனால் எதிர்பாராத விதமாக பந்தை தட்டி விட்டு அவர் 2 ரன்களை எடுத்து விட்டார்.

மேலும் இந்த போட்டியில் பல்வேறு தவறுகள் நடந்து இருக்கிறது அதை நீங்கள் நிர்வாகம் சீக்கிரம் சரி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.