திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதற்கு காரணம் இதுதான்..! உண்மையை ஓப்பனாக பேசிய ரோஷினி..!

kannamma-1
kannamma-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான்.

இந்நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் நடிகை ரோஷினி இவர் தற்சமயம் இந்த சீரியலை விட்டு விலகியதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

ஏனெனில் இவர் நடித்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டியது மட்டுமில்லாமல் ரசிகர்களை பெருமளவிற்கு கவர்ந்து விட்டார் மேலும் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில்  தற்போது டிக் டாக் பிரபலம் வினுஷா தேவி நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்தவகையில் நேற்று இவர் நடித்த எபிசோடில் கண்ணம்மா வாக காட்சியளித்த வினுஷாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கி விட்டார்கள். ஆனால் இதுபோன்ற மாற்றத்தை ஆரம்பத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் போக போக சரியாகி விட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் ரோஷினி நடித்த பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதற்கு காரணம் இதுதான் என ஓபனாக பேசியுள்ளார். அந்த வகையில் தனக்கு தவிர்க்கமுடியாத  காரணத்தின் மூலமாகத்தான் இந்த சீரியலில் இருந்து விலகினேன் அதுமட்டுமில்லாமல் தான் இந்த அளவிற்கு வளர்வதற்கு காரணம் என்னுடைய ரசிகர்கள் தான் அவர்களுடைய ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகி இருந்தாலும் சோசியல் மீடியா வழியாக  பாரதி கண்ணம்மாவின் கண்ணம்மா ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.