தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவர் வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான துணிவு படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகி இருக்கிறதாம்.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பது வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக டப்பிங் பணிகளையும் முடித்தது தற்பொழுது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்ட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக நாம் பார்ப்போம்..
அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு அவரது படம் முன்ன பின்ன வெளிவந்தாலும் அவரது புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இதை சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுப்பி இருக்கின்றனர். இதற்கான பதிலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார் அதில் அவர் சொன்னது.. ஒரு சமயம் அட்டகாசம் படத்தின் படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி சென்று இருக்கிறாராம் அஜித்..
அந்த சமயம் தான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறார் எந்த பாதுகாப்பும் இல்லாமல் துறைமுகத்தில் இறங்கினாராம் இவர் வருவதை அறிந்த ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் சூழ்ந்து கொண்டனாராம். அப்பொழுது தான் அஜித் முதன் முதலில் தன் ரசிகர்களின் பலத்தை கண்ணெதிரே பார்த்திருக்கிறாராம்.
எப்படியோ படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் பொழுது இயக்குனர் சரணிடம் என்ன சார் இப்படி இருக்கிறார்கள் என கேட்டாராம் அஜித்.. அதற்கு இயக்குனர் சரண் இதுதான் சார் உங்க பலம் எனக் கூறினாராம். அன்று அஜித் ஒரு முடிவை மேற்கொண்டார். அதாவது ரசிகர்கள் மன்றத்தை தான் கலந்து விட்டோம் ரசிகர்களுக்காக தனது புகைப்படத்தை வெளியிட அனுமதி கொடுத்தாராம்..