நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அண்மைக்காலமாக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் ஏன் இவர் தற்பொழுது தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை வைத்து படமாக உருவாகி வருகிறது.
இதனால் இந்த படம் ஆக்சனுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என தெரிய வருகிறது. ஏ கே 61 திரை படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, மகாநதி சங்கர், யோகி பாபு, அஜய் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. Ak 61 படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஏகே 61 பட குழு வெளிநாடு செல்ல இருக்கிறது அதற்கு முன்பாக அஜித் மற்றும் மஞ்சு வாரியர் போன்றவர்கள் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் AK 61 படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை என்பது குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பார்க்கையில் ஏகே 61 படம் நடிகர் நடிகைகள் என அனைவரும் ரெடியாகி இருக்கும் பொழுது ஏன் சூட்டிங் தொடங்கப்படாமல் இருக்கிறது.
என்றால் இந்த படத்தின் பைனான்சியல் பிரச்சனையினால் தான் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.. பைனான்சியர் சரியாக நிதியை ஒதுக்காமல் படத்தை எடுத்து வருவதால் தான் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது இது போன்ற தடை ஏற்படுவதாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.