thala ajith: தற்பொழுது அஜீத்தின் ரசிகர்களுக்கு சமூக வலைதளபக்கங்களில் ஒரு சோகமான செய்தி பரவி வருகிறது.
அந்த செய்தி என்னவென்றால் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தை எச் வினோத் இயக்கத்தில் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்நிலையில் ஏற்கனவே சூட்டிங் பாதியில் நின்று சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் சூட்டிங் எடுத்துக்கொண்டிருந்தார்கள் மேலும் ஹைதராபாத்தில் சூட்டிங் முடிவடைந்து விட்டதால் சென்னைக்கு வந்திருந்த தல அஜித்.
ஒரு மாதம் படக்குழுவினர்களுக்கு ஷூட்டிங் இல்லாமல் விடுமுறை விட்டு உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஒரு மாதம் கழித்துதான் வலிமை திரைப்படத்தில் இரண்டாவது முறையாக நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் சினிமா வட்டாரத்தில் இருந்து வெளிவந்துள்ளது.
இந்த தகவல் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் படக்குழுவினர்களுக்கு மட்டுமல்லாமல் சமூக வலைதளபக்கங்களில் அஜித்தின் ரசிகர்களுக்கும் சோகமான தகவல்களாக மாறிவருகிறது.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ஏன் அஜித் இப்படி பண்ணுகிறார் என்று சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.