திரையுலகில் இருக்கும் குணச்சித்திர நடிகர்கள் பலரும் காசு இல்லாமல் மருத்துவமனைக்கு செல்ல கூட முடியாமல் தவிக்கின்றனர். ஒரு சில குணச்சித்திர நடிகர்கள் முடியாத நிலையில் தன்னிடம் பயணித்த நடிகர் நடிகைகளிடம் உதவி கேட்பதுண்டு ஆனால் ஒரு சில நடிகர்கள் முன் வந்து உதவுகின்றனர் ஒரு சில நடிகர்கள் விஷயம் தெரிந்தும் உதவி செய்யாமல் இருக்கிறார்கள்.
அப்படி அஜித் நடிகர் பொன்னம்பலம் அவர்களுக்கு உதவி செய்யவில்லை என பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏன் அஜித் எனக்கு உதவி செய்யவில்லை என்பது குறித்தும் நடிகர் பொன்னம்பலம் பேசி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித்தின் சில படங்களில் பொன்னம்பலம் நடித்திருந்தார். அப்பொழுது இருவருக்கும் இடையே நல்ல நெருக்கம் ஏற்பட்டது. இதனால் அஜித்தை பொன்னம்பலம் தம்பி என்று அழைப்பாராம் முகவரி, அமர்க்களம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது அஜித்திற்கு ஒரு வலி ஏற்பட சட்டையை கழட்டி காண்பித்தாராம்..
அவர் முதுகை பார்த்ததும் பொன்னம்பலம் ஷாக் ஆகிவிட்டாராம் ஆம் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்டுகளாக இருக்கும் எங்களுக்கே இவ்வளவு தையல் போடவில்லை ஆனால் அஜித்திற்கு இப்படி என ஷாக் ஆகிவிட்டாராம்.. கழுத்தில் இருந்து ஆசனவாய் வரைக்கும் ஆயிரக்கணக்கான தையில் போட்டிருந்ததாம் பைக் ஆக்சிடெண்டில் வந்த விளைவுதானாம். மேலும் யாருக்கும் தெரியாமல் உதவிகளை செய்யக்கூடியவர் என்றும் பொன்னம்பலம் கூறினார் ஒரு சமயம் பொன்னம்பலத்தின் நண்பர் ஒருவரின் மகனுக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது.
அதனால் பிரபு, குஷ்பூ என சிலர் பண உதவிகள் செய்ய மீதம் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டதாம் உடனே பொன்னம்பலம் அஜித்தை நம்பி வந்தாராம் முழு விவரத்தையும் அஜித் கேட்டு கொண்டாராம் படப்பிடிப்பு இடைவெளியில் மீண்டும் அஜித்திற்கு ஞாபகப்படுத்த பொன்னம்பலம் வந்துள்ளார். அதற்கு அஜித் அண்ணா அந்த பணத்தை காலையிலேயே ஷாலினியை வைத்து கட்ட சொல்லிட்டேன் என்று அஜித் சொன்னதும் பொன்னம்பலத்திற்கு அதிர்ச்சியாகிவிட்டதாம்..
இதைப் பற்றி கூறிய பொன்னம்பலம் இந்த ஒரு நிகழ்வுதான் அஜித்தை பற்றிய ஒரு நல்ல அபிப்ராயம் எனக்கு அன்று வந்துவிட்டது. யார் என்ன சொன்னாலும் சரி அஜித்தின் மனசு யாருக்கும் வராது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ரஜினி, கமல் எல்லோரும் நலம் விசாரிக்க அஜித் மட்டும் ஒண்ணுமே கேட்கவில்லையா என்ற தகவல் இருந்தது.
ஆனால் அந்த சமயத்தில் அஜித்தின் அப்பாவுக்கு ரொம்பவும் முடியாததால் அஜித் அதில் கவனம் செலுத்தினார் அதனால் தான் தன்னை பற்றி யோசித்து இருக்க மாட்டார் என நினைக்கிறேன் இருந்தாலும் அஜித் மனதில் நினைத்து கொண்டுதான் இருப்பார் . ஏதாவது பட வாய்ப்பு வரும் போது அண்ணனை அழைக்கலாம் அதன் பிறகு ஏதாவது உதவி செய்யலாம் என நினைத்துக் கொண்டுதான் இருப்பார் என்று அஜித்தை பற்றி பேசினார்.