தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் அஜித் மற்றும் விஜய் இவர்களுக்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இவர்களுடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது எனவே ஒன்றுக்கொன்று பஞ்சம் அல்லாமல் இருதரப்பு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படத்தினை அடுத்து தற்பொழுது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் லியோ பட குழுவினர்கள் காஷ்மீரில் தஞ்சம் இட்டு உள்ளனர். இதனை அடுத்து நடிகர் அஜித் தன்னுடைய ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கூறப்பட்டது.
விக்னேஷ் சிவன் ஆர்வமாக கதை எழுத பிறகு லைக்கா நிறுவனம் மற்றும் அஜித்திற்கு அந்த கதை பிடிக்காத காரணத்தினால் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். எனவே தற்பொழுது நடிகர் அஜித் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அஜித் மற்றும் விஜய் பொதுவாகவே மிகவும் அமைதியான கேரக்டர் என பல பிரபலங்கள் கூறி கேட்டிருக்கிறோம். அந்த வகையில் தான் சமீப பேட்டி ஒன்றில் குணச்சித்திர நடிகரும், காமெடி நடிகருமான எம்.எஸ் பாஸ்கர் கூறியுள்ளார்.
அதாவது சமீப பேட்டி ஒன்றில் எம்.எஸ் பாஸ்கர் தம்பி விஜய் அவர் பெரிதாக பேச மாட்டார்.. என்ன பேசணும்? எங்கள மாதிரி உள்ளவங்க கிட்ட வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா என்ன பண்றீங்க என கேட்பார் அதன் பிறகு பெரிதாக வேறு யாரிடமும் பேசாததற்கு முக்கிய காரணம் கொஞ்சம் பேசினால் தலையில் ஏறி உட்கார்ந்துப்பாங்க அப்புறம் இந்த படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்க என கேக்க ஆரம்பிச்சிடுவாங்க என கூறினார்.
மேலும் அஜித் பற்றி என்னையும் இன்னொரு ஆர்டிஸ்டையும் உட்கார வச்சிட்டு 9 மணி நேரம் முதுகு வலியோட நின்னுகிட்டு பேசிகிட்டு இருந்தாரு கிரீடம் படத்துல நடிச்சுக்கிட்டு இருக்கும்பொழுது என்னால முடியாது நீங்க உட்காருங்க எனக்கு முதுகு வலி என கூறினாராம் மேலும் அஜித் மிகவும் தன்மையான மனிதர் என எம்.எஸ் பாஸ்கர் கூறியுள்ளார்.