தமிழ் சினிமாவில் நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு நடிகர் என்றால் அது விக்ரம் தான் இவர் தற்போது பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக பல அறிவிப்புகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது ஆனால் இவருடைய நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் இந்த நாள் முதல் வெளி வரவே இல்லை.
இந்நிலையில் ஒரேடியாக அனைத்து திரைப்படங்களையும் முடித்த பிறகுதான் இனிமேல் அறிவிப்பை வெளியிடுவார் என்று நினைத்த நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பொதுவாக நடிகர் விக்ரமுக்கு சமீப காலமாக எந்த ஒரு திரைப்படமும் வெற்றி கொடுக்கவில்லை. அந்த வகையில் தற்போது எப்படியாவது வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றி இயக்குனர்களுடன் தேடி தேடி வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
சமீபத்தில்தான் பா ரஞ்சித் சார் பாட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இந்நிலையில் இவருடன் இணைந்தால் வெற்றி நமக்கு நிச்சயம் என தற்போது இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது தன்னுடைய மகனின் திரைப்படத்தை ப ரஞ்சித் தயாரிக்கவுள்ளது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தான் அடிக்கடி பா ரஞ்சித் சந்திப்பதன் மூலம் ஆக விக்ரம் அவரிடம் சிறிய பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தை என்னை வைத்து இயக்கி வெற்றி கொடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளாராம்.
ஏனெனில் தற்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்தும் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்றால் தற்போது விக்ரம் எந்த ஒரு திரைப்படத்திலும் ஹிட் கொடுக்காதது தான். ஆகையால் சிறு பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தில் வெற்றியை கொடுத்துவிட்டு பெரிய பட்ஜெட் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறி வருகிறதாம்.
இதன் காரணமாக தற்போது வேறு வழியின்றி பா ரஞ்சித் இடம் நடிகர் விக்ரம் சரணடைந்துள்ளார்.