மேடையில் கதறி கதறி அழுத நடிகர் சிவாகார்த்திகேயன் காரணம் இவுங்க தான்.! உண்மையை சொன்ன பிரபலம்.

sivakarthikeyan

this-is-the-reason-of actor-sivakarthikeyan crying :தமிழ் சினிமா உலகில் திறமையின் மூலம் தன்னந்தனியாக உள்ளே நுழைந்தவர்கள் வெகுசிலரே அப்படி தமிழ் சினிமா உலகில்சமிப காலத்தில் நுழைந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை அமைத்து தற்போது முன்னணி நடிகராக வளர தொடங்கி உள்ளார் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பல ஷோக்களை தொகுத்து வந்த இவர் பின்னாட்களில் தனது திறமையின் மூலம் வெள்ளித்திரையில் காணப்பட்டார்.

முதல் படத்திலேயே ஓரளவு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களால் இவர் ஏற்றுக்கொண்டனர் மேலும் அடுத்தடுத்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தது வந்ததன் முலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

சினிமா உலகில்  சிறப்பாக படங்களை கொடுத்தன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் நடிகர்களுக்கு ஈடு இணையாக வந்தார். மேலும்  இவரது படங்கள் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன ஒரு சில படங்கள் தோல்வியை தழுவினாலும் அதனை அடுத்தடுத்த படங்களில் ஈடுகட்டினார்

அப்படி இவர் நடித்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய ஹிட் திரைப்படம் ரெமோ இத்திரைப்படத்தில் பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்திருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு ஒரு நல்ல ஒரு இமேஜை பெற்றுக் கொடுத்தது இப்படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் அவர்கள் மேடையில் கண் கலங்கி நின்றார் அதற்கான காரணத்தை தற்பொழுது தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்கள் கூறியுள்ளார்.

siva-karthikeyan
siva-karthikeyan

சினிமா உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் இல்லை என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு வந்தாலும் உள்ளுக்குள் அத்தகைய நடிகர்களுக்கு வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணம் உண்டு அப்படித்தான் தமிழ் சினிமாவிலும் சிவகார்த்திகேயனை வளர்ந்து விடக்கூடாது என்று அவரை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகம் வேலை பார்த்து உள்ளனர்.

ஆனால் சிவகார்த்திகேயனின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியவில்லை அதற்கு காரணம் அவர் கடினமாக உழைக்க கூடியவர் அதனால் மட்டுமே தற்பொழுது அவர் தொட முடியாத உச்சத்தில் இருந்து வருகிறார் என்று ரவீந்திரன் கூறினார்.