நடிகர் சசிகுமார் “தாடியை” எடுக்காமல் படங்களில் நடிப்பதற்கு இதுதான் காரணம் – அவரே கூறிய சுவாரஸ்சிய தகவல்.

sasikumar
sasikumar

கடந்த சில வருடங்களாக இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலரும் ஹீரோ அவதாரம் எடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில்  சசிகுமார் முதலில் இயக்குனர் அவதாரம் எடுத்திருந்தாலும் சூழ்நிலை அவரை ஹீரோவாக மாற்றியது. ஹீரோவாக தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் உருவாக்கி..

சூப்பராக ஓடிய இவர் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் பெரிதும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை இதனால் சசிகுமாரின் மார்க்கெட் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை தக்க வைத்துக் கொள்ள அவரும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து தான் வருகிறார்.

அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நான் மிருகமாய் மாற.. இந்த திரைப்படத்தை சத்திய சிவா இயக்கினார். சசிகுமாருக்கு  ஜோடியாக ஹரிப்பிரியா நடித்தார். வில்லனாக விக்ராந்த் நடித்தார் படம் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவான காரி திரைப்படம் இன்று கோலாகலமாக ரிலீஸ் ஆகி உள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து  சசிகுமார் கையில் பகைவனுக்கு அருள்வாய், naa naa ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சசிகுமார் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறீர்களா.. என நிருபர் கேள்வி எழுப்பினார்.

என்னை எல்லோரும் தாடி உடன் பார்த்து பழகி விட்டனர் தற்பொழுது தாடி எடுத்தால் மட்டும் புது மாதிரியாக பார்ப்பார்கள் இன்னும் சொல்லப்போனால் எனது குழந்தை பிறந்ததிலிருந்து என்னை தாடியுடன் தான் பார்த்து வருகிறது. இந்த தாடியானது பொன்னியின் செல்வன் பகுதி 2 இல்ல.. வேறொரு படத்திற்காக வைத்துள்ளேன் என்றார். இது போன்ற பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார் சசிகுமார்.