தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக தனுஷ் நடித்து வருகிறார்.
திரையுலகில் வெற்றியை மட்டுமே ருசிக்கும் தனுஷ் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளையும், அவமானங்களையும் தற்போது சந்தித்து வருகிறார். நடிகர் தனுஷ் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.
ஐஸ்வர்யாவும், தனுஷ் 17 வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி குடும்பமும் சரி, தனுஷ் குடும்பமும் சரி எவ்வளவு முயற்சித்து பார்த்தது ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் இருவரும் தற்பொழுதும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ் ஒரு பக்கம் படங்களில் நடிக்க மறுபக்கம் ஐஸ்வர்யாவோ ரஜினி வைத்து லால் சலாம் என்னும் படத்தை எடுத்து வருகிறார். இப்படி இருப்பதால் இருவரும் சேர்ந்து வாழ்வது இனி நடக்காத காரியம் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவே இல்லையாம்.. தனியாக வாழ போகிறோம் என்று தான் இருவரும் கூறினார்கள் தவிர விவாகரத்து நோட்டீஸ் கொடுக்கவில்லை ஓரிரு வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களாம்.. தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியதன் நோக்கமே அப்பாவும், மகளும் பக்கத்தில் இருக்க நினைத்து தான் அந்த நிலத்தையே வாங்கினாராம்..
கிரஹபிரவேசம் நடந்தபோது ரஜினியின் 80 வது பிறந்த நாளுக்காக ரஜினி உடன் ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் சென்றுவிட்டார்கள் அதே நாளில் கிரஹபிரவேசம் நடந்ததால் தான் அவர்களால் வர முடியவில்லை என தனுஷுக்கு நெருக்கமாக இருக்கும் இயக்குனர் சுப்பிரமணிய சிவா தன்னிடம் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.