தமிழ் சினிமாவில் பொதுவாக டாப் நடிகர்கள் பலரும் மக்களுக்கு தொடர்ந்து நல்ல வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுடன் இணைந்து படமெடுக்க ஆசைப்படுவார்கள் ஆனால் அதற்கு மாறாக தற்போது டாப் நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற பலருமே..
இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அந்த ரூட்டில் செல்கின்றனர். மேலும் அதற்கேற்றவாறு இந்த காலகட்டத்தில் இளம் இயக்குனர்களின் படங்கள்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றது.
அப்படி சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், போன்ற அவர் இயக்கிய மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடைந்ததை தொடர்ந்து அடுத்ததாக கமலுக்கு ஒரு ஆக்ஷன் படத்தின் கதையைக் கூற கமலுடன் இணைந்து விக்ரம் என்னும் படத்தில் பணியாற்றி உள்ளார்.
படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி கண்டு வருகின்ற நிலையில் உலகம் முழுவதும் தற்போது விக்ரம் படம் பற்றி தான் பேச்சு அந்த அளவிற்கு லோகேஷ் க்கு பெரிய பெருமையை தேடித் தந்துள்ளது இந்த படம். ஆனால் லோகேஷ் கூறுவது இந்த படம் வெற்றியடைய முழுக்க முழுக்க கமல் சார் தான் காரணம் என்று கூறுகிறார்.
ஏனென்றால் அவர் இவருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளாராம் இந்த படத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் உனது பாணியில் எடு நான் ஒரு நடிகராக மட்டும் வந்து செல்கிறேன் மற்றபடி இது உன்னுடைய படமாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார் அப்படி அவர் கூறியதால் என்னால் சுதந்திரமாக படம் எடுக்க முடிந்தது என லோகேஷ் கூறியுள்ளார்