தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் மாறன் திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்தடுத்த புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது கையில் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் இருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது நானே வருவேன் திரைப்படத்தை தான் காரணம்.
இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் செல்வராகவன் இந்த படத்தை இயக்குவதையும் தாண்டி வில்லன் ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை தயாரிக்கும் எஸ் கலைபுலி தாணு நானே வருவேன் படத்தை பற்றி பெரிய அளவில் பேசி வருகிறார்.
இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தின் கதையை சொல்லும் போது சீட்டின் நுனிக்கி வந்து விட்டடேன் படத்தின் கதை அப்படி இருந்ததாம் இதை அறிந்த ரசிகர்கள் நானே வருவேன் படத்தை பார்க்க காத்துக் கொண்டு இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் பற்றிய செய்திகள் இணையதள பக்கத்தில் தீயாய் பரவுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் நடித்த வடசென்னை இரண்டாவது பாகம் எப்பொழுது உருவாகும் என்பது குறித்து பேசி உள்ளார். வடசென்னை படத்தை எடுக்கும் பொழுதே வடசென்னை இரண்டாவது பாகத்தின் 50 நிமிட காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறினார் தனுஷ். மேலும் வடசென்னை இரண்டாவது பாகம் உடனே எடுக்க வேண்டிய ஒரு திரைப்படம் தான்.
ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை படத்தில் இருந்து விலகி சிறு இடைவேளை எடுக்க விரும்பினார். அவர் வேறு சில கதைகளை சொல்ல நினைத்ததால் மற்ற திரைப்படங்களை எடுக்க சென்று விட்டார். அந்தப் படங்களை முடித்துவிட்டு வடசென்னை 2 எடுக்க எப்பொழுது அழைக்கிறாரோ உடனே வட சென்னை இரண்டாவது பாகத்தில் இணைவேன் என தனுஷ் வெளிப்படையாக கூறி உள்ளார்.