தமிழ் சினிமா உலகில் அண்மை காலமாக நல்ல நல்ல படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து மக்கள் அதிகம் பார்க்க விரும்பும் திரைப்படம் பொன்னியின் செல்வன் தான் ஏனென்றால் இந்த படம் கல்கி எழுதிய ஒரு வரலாற்று நாவலை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
அதனால் இந்த படத்தை பார்க்க அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர். படத்தைப் பார்த்த அனைவரும் படத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர் இதனால் படம் நல்ல விமர்சனத்தையே இதுவரை பெற்றிருக்கிறது அதற்கு ஏற்றார் போல வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் அடித்து நொறுக்கி வருகிறது இதுவரை மட்டுமே 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறதாம்.
வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும் அருள்மொழிவர்மன் மற்றும் ஆதித்த கரிகாலன், குந்தவை, நந்தினி ஆகியோரின் கதாபாத்திரத்தையே பெரிதும் கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி யை ரஜினி, கமல், தொடங்கிய அனைவரும் தலையில் தூக்கி வைத்து பேசி வருகின்றனர்.
அந்த அளவிற்கு சூப்பராக நடித்திருக்கிறார் ஏன் அண்மையில் கூட நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா மலர் கொத்து கொடுத்து அசத்தியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் நான் சிறப்பாக நடித்து குறித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜூ வீட்டில் பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் அவரே வெளிப்படையாக சொல்லி உள்ளார்.
மணி சார் அட்வைஸை ஏற்று தான் ஆறு மாத காலங்கள் ராஜாவாகவே தன்னை நினைத்துக் கொண்டதாக தெரிவித்தார் அவர் சொன்னதற்கு இணங்க தான் கீழே பார்க்காமல் நடக்க பழகியதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்த கேரக்டருக்காக குதிரை ஏற்றம், வாள் பயிற்சி போன்றவற்றைத் தான் கற்றுக் கொண்டதாகவும், இது மட்டும் இல்லாமல் தான் மனதளவில் ஆறு மாதங்கள்.
இதற்காக தன்னை தயார்படுத்தியதாகவும் கண்ணில் பட்டதை எல்லாம் தன்னுடையது, தன்னுடைய எல்லைக்குட்பட்டதாக கருதி கொண்டதாகவும் குறிப்பிட்டார். மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது என்ற படத்தின் வசனத்தை உள்வாங்கிக் கொண்டுதான் நடித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார் கதைக்கு என்ன தேவையோ அதை தான் நான் கொடுத்தேன் என கூறி கடைசியாக முடித்தார்.