தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர்தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிறந்த நடிகர் மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் என தன்னுடைய பன்முக திறனை தமிழ்சினிமாவில் கொண்டவர் ஆவார். இந்நிலையில் நமது நடிகருடன் பொழுது மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் வெகுகாலமாக நடிகர் கமலஹாசன் அவர்கள் எந்த ஒரு மெகா ஹிட் திரைப்படங்களையும் கொடுக்கவில்லை என்று சொல்லலாம் அந்த வகையில் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற காரணத்தினால் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார்.
இவ்வாறு அவர்களுடைய கூட்டணி மிக சிறப்பு மிக்கதாக அமைந்தது மட்டுமில்லாமல் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படமான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது அந்த வகையில் தெலுங்கு ரசிகர்களை இந்த திரைப்படம் மிக வெகுவாக கவர்ந்து விட்டதாம்.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் மிகப் பெருமளவு பெருமை சேர்த்துள்ளார்கள் என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் பகத் பாசில் விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் இதில் பெருமளவு பிரபலமானது சூரியவின் ரோலக்ஸ் கதாபாத்திரம்தான்.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் கடைசியாக முகம் காட்டி வந்தாலும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பு மிக்கதாக அமைந்தது மட்டுமில்லாமல் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது என்று கூட சொல்லலாம்.
அந்த வகையில் அப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்கு தகுந்தார்போல் சூர்யாவை மாற்றிய மேக்கப் கலைஞருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா அவர்கள் தனக்கு மேக்கப் செய்தது யார் என்ற ரகசியத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவருடைய பெயர் செரினா டிக்சீரியா ஆகும் இவர் சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்கார நிபுணர் ஆவார் இவர் ஏற்கனவே பல்வேறு தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.