அஜித் : லைகா புரொடெக்ஷன்னில் இணைய இவ்வளவு காரணம் இருக்கா.? அசர வைக்கும் தகவல்.

ajith-
ajith-

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அண்மை காலமாக இவர் நடிப்பில்  வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக மாறியதால் சினிமாவில் இவருக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுப்பதால் அஜித் படத்தை ரசிகர்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் வலிமை திரைப்படம் மட்டும் அஜித் ரசிகர்களை சற்று வாட்டி வதைத்து விட்டது. இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக கடந்த மாதம் 24 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இப்பொழுதும் இந்த திரைப்படமும் நான்கு வாரங்களை தொட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் பெற்று ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இது இப்படி இருக்க இந்த வருடத்தில் இன்னொரு திரைப்படத்தை கொடுக்க நடிகர் அஜித் முனைப்பு காட்டி உள்ளார் அந்த வகையில் மீண்டும் ஹச். வினோத்துடன் இணைந்து தனது 61 வது திரைப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப்படத்தின் கதைக்காக தனது உடல் எடையை அதிகமாக்க குறைத்துள்ளார் அதேசமயம் இந்த படத்தில் மங்காத்தாவுக்கு அடுத்தபடியாக நெகட்டிவ் ரோலில் நடித்தால் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த சந்தோஷத்தை கொண்டாட முடிப்பதற்குள் அடுத்த செய்தியையும் தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

லைகா புரோடக்சன் தயாரிக்க இருப்பதாக அண்மையில் உறுதிசெய்யப்பட்டது 30 ஆண்டுகளாக சினிமா உலகில் வலம் வரும் அஜித்திற்கு நல்லது கெட்டது தெரியும். எதில் பணியாற்றினால் கரெக்டாக இருக்கும் என எல்லா விஷயமும் அறிந்தவர் ஆனால் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம் உடனும் இதுவரை கைகோர்க்கும் அஜித் முதன் முறையாக கைகோர்க்கும் உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

ஏன் அஜித் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து உள்ளார் என்பது குறித்தும் நாம் இப்பொழுது விலாவாரியாக பார்ப்போம் அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து வருகிறார். தான் நடிக்கும் படங்களும் சரி,  தான் செய்யும் செயல்பாடுகளிலும் சரி மீடியா உலகில் மட்டும் சிக்கிக் கொள்ளவே கூடாது என்பதற்காக புதிய முடிவுகளை எடுப்பார்.

அஜித் படத்தை பொருத்த வரை படம்  வசூல் எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டு விமர்சிப்பது, வாழத்து இருகின்றனர். இந்த சிக்கலில் இருந்து வெளிவர.. முதல் முறையாக தனது 62வது திரைப்படத்தின் மூலம் கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன் அணியில் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.

இதில் இணைந்து ஒரே ஒரு பெனிஃபிட் என்னவென்றால் இந்தப் படத்தில் நடித்தால் மட்டும் போதும் சம்பளம் ஆட்டோமேட்டிக்காக வந்துவிடும் படம் வெற்றி தோல்வி எல்லாம் அவர்களையே சேர்ந்துவிடும். எந்த பிரச்சினையும் இருக்காது. இதனால் நடிகருக்கு எந்த பாதிப்பும் வராது என்பது குறிப்பிடத்தக்கது. அதை மனதில் வைத்தே கிசுகிசுவில் இருந்து வெளியேற இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைவது ரொம்ப பெஸ்ட் எனக் கருதி கூட அஜித் இணைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.