கமலஹாசன் படங்களில் ரகுவரன் நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் – பல வருட உண்மையை உடைத்த பிரபலம்.!

kamal-
kamal-

உலக நாயகன் கமலஹாசன் திரை உலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இவர் எந்த மாதிரியான கதாபாத்திரம் மற்றும் அதற்கு ஏற்ற மாதிரி எந்த கெட்டப் போட சொன்னாலும் பயப்படாமல் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் அவரது படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகின்றன ஏன் அண்மையில் இவர் நடித்த விக்ரம் திரைப்படம்.

விமர்சன ரீதியாக பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் வசூலில் புதிய உச்சத்தை தொட்டது ஆம் விக்ரம் திரைப்படம் ஒட்டு மொத்தமாக 410 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசனுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவித்துள்ளன அதில் முதலாவதாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2.

படத்தில் தற்போது மீண்டும் நடித்து வருகிறார் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு கமல் சபாஷ் நாயுடு, தேவர்மகன் 2, வேட்டையாடு  விளையாடு 2 போன்ற பல்வேறு படங்களில் நடிக்க இருக்கிறதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

கமலஹாசன் குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். கமலஹாசன் ஒரு மிகச்சிறந்த நடிகர் அவருக்கு தெரியாத விஷயங்களை கிடையாது, ஆனால் அவருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது எந்த திரைப்படங்களாக இருந்தாலும் எடிட்டிங்கில் தலையிட்டு தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் சக நடிகர் யாராவது நடுவில் ஸ்கோர் செய்தால் அந்த காட்சியை கொஞ்சம் எடிட் செய்வார்.

இது அவரை பொறுத்தவரையிலும் திரையை பொருத்தவரையிலும் சரி ஆனால் அந்த சக நடிகருக்கு சங்கடம். இந்த காரணத்தினால் தான் ரகுவரன் கமல்ஹாசன் திரைப்படங்களில் இருந்து வரும் வாய்ப்புகளை மறுத்தார் என கூறியுள்ளார் இந்த செய்தியை இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.