இளம் வயதிலேயே சினிமா உலகில் நடிக்க வந்தவர் பூனம் பாஜ்வா இவர் 2009 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவான திரைப்படம் சேவல் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலிருந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து வாய்ப்புகளும் ஏராளமாக குவிந்தன அந்த வகையில் தெனாவட்டு கச்சேரி ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். இதனால் இவருக்கு ரசிகர்களும் உருவாகினர். அதன் பிறகு இவர் நடித்த தம்பிக்கோட்டை, துரோகி, ஆம்பள போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை பெற்று தரவில்லை..
ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை கைப்பற்ற இவர் மற்ற நடிகைகள் போல சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். குணசித்திர கதாபாத்திரங்களும் வந்தன அதில் நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் பூனம் பாஜ்வா சமூக வலைதளங்களில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். சேவல் படம் முதல் இப்பொழுது வரை திரைப்படத்தில் நடிப்பது என்பது என்னால் நம்ப முடியவில்லை எனக்கு நடனத்தில் ஆர்வம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டும் வகையில் படங்கள் அமையவில்லை..
மேலும் தன் மீது அன்பு காட்டும் ரசிகர்களிடத்தில் இரண்டு மடங்கு அன்பு வைத்துள்ளேன் சென்னை வரும்பொழுது தென்னிந்திய படங்களில் நடிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளதாக பூனம் கூறினார். ஒரு கட்டத்தில் தொகுப்பாளர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிடுவது பற்றி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பூனம் பாஜ்வா பதில்.. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 96% ஆண்கள் தான் என்னை பின்தொடர்கிறார்கள் என் புகைப்படம் வைரலானது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே சமயம் இதுவரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோக்களில் நீச்சல் உடை போட்டோக்கள் தான் அதிகம் நான் எடுப்பவற்றில் எது அழகாக இருக்கிறதோ அதை பதிவிடுவேன் அவ்வளவுதான் என்னை பொருத்தவரை கிளாமர் என்பது உடலை மையப்படுத்திய ஒரு விஷயமாக நினைக்கவில்லை சினிமாவில் அப்படியா காட்டப்படுகிறது நான் நடித்த தமிழ் படங்களில் கேரக்டர்கள் அனைத்துமே குடும்ப கேரக்டர்கள் தான் மேலும் என்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் அப்படங்களுக்கு பிறகு எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை..