திருமண விஷயத்தில் ஈடுபடாததற்கு இதுதான் காரணம்.? முதல் முறையாக வாய் திறந்த எஸ்.ஜே சூர்யா..!

s.j.-surya
s.j.-surya

எஸ் ஜே சூர்யா இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்து வெற்றியை கண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் ஆனால்  அப்பொழுது அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை அதை நன்கு உணர்ந்து கொண்ட எஸ்.ஜே. சூர்யா சினிமாவுக்கு  சிறு லீவு விட்டு மீண்டும் கம்பேக்  கொடுத்தார்.

ஆனால் இந்த தடவை அவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் மேலும் அந்த படங்களில் இவர்களின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த வகையில் இவர் மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். மேலும் இவர் ஹீரோவாக நடித்த படங்களும் வெற்றியை பெற்றன.

இதனால் தற்பொழுது எஸ்.ஜே சூர்யாவின் சினிமா மார்கெட் அதிகரித்துள்ளது. அதனால் இப்போ பட வாய்ப்புகளும் ஏராளமாக குவிக்கின்றன. அதுவும் டாப் நடிகர்களுக்கு வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார். விஷாலின் மார்க் ஆண்டனி, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வரும் RC 15 படத்தில் ராம்சரணுக்கு வில்லனாகவும்  ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சினிமா உலகில் வெற்றியை ருசித்தாலும் 57 வயதாகும் நடிகர் எஸ். ஜே. சூர்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என எஸ் ஜே சூர்யாவை தொடர்ந்து கேட்டு வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் அவர் சில காரணங்களை முன்னெடுத்து வைத்துள்ளார் அதுகுறித்து விலாவாரியாக நாம் பார்ப்போம்.

நான் சினிமா உலகில் ஆபத்தான சில விஷயங்களில்  துணிந்து இறங்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் நான் சம்பாதித்த மொத்த காசையும் இயக்கி, நடித்த நியூ படத்திற்காக முதலீடு செய்தேன் அந்த படம் வெற்றி பெற்றது. ஒருவேளை நியூ படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்து இருந்தால் அந்த கஷ்டம் என்னுடைய போயிருக்கும்.  ஒருவேளை திருமணம் ஆகி இருந்தால் மனைவி, குழந்தைகள் என அவர்களையும் பாதித்து இருக்கும் என தெரிவித்தார்.