இயக்குனர் சிவா 2011 ஆம் ஆண்டு கார்த்தி தமன்னாவை வைத்து சிறுத்தை என்னும் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்ததால் அதிலிருந்து சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டு வந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து சூர்யாவுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது ஆனால் சில காரணங்களால் அப்போது அது நடைபெறவில்லை..
பின்பு அடுத்து தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே அஜித்துடன் இணைந்து வீரம் என்னும் ஹிட் படத்தை கொடுத்தார். அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான முதல் படமும் சிறப்பாக இருந்ததை எடுத்து அஜித் சிறுத்தை சிவா உடன் இணைந்து தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து வெற்றி கண்டார்.
அந்த வகையில் அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது சிறுத்தை சிவா சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார் சூர்யா தற்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் முடிந்ததும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி சினிமாவில் அறிமுகம் ஆகி 21 ஆண்டுகள் நிறைவடைந்தது அதற்கு வாழ்த்து கூறும் வகையில் சிவா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அப்போது பேசிய கார்த்தி சிவா மிகவும் இனிமையானவர்.
அவர் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் 200% அவரை நம்பும்படி நடந்து கொள்வார் மேலும் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் சிவா. கடைசியாக கார்த்தி அஜித் சார் தொடர்ந்து ஒரு இயக்குனருடன் நான்கு படங்களில் பணியாற்றியதற்கு இது தான் காரணம் எனக் கூறியுள்ளார்.