ஐபிஎல் 15வது சீசன் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி கோலாகலமாக இந்தியாவில் தொடங்கியிருக்கிறது. ஐபிஎல் – லில் இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. ஐபிஎல் 15 வது சீசன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு அணிகளும் அடுத்தடுத்த போட்டிகள் விளையாட ரெடியாக இருப்பதால் தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக வளை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக IPL -லில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருபவர் கே எல் ராகுல்.
கடந்த வருடங்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவர் தற்போது அந்த அணியில் இருந்து விலகி புதிய அணியான லக்னோ அணிக்கு கேப்டனாக தேர்வாகியுள்ளார். பஞ்சாப் அணியில் ஏற்கனவே கேப்டனாக இருந்து சிறப்பாக விளையாடி இருந்தாலும் அந்த அணி வெற்றியை மட்டும் ருசித்து பாட்டு இல்லை.
இப்படி இருக்கின்ற நிலையில் லக்னோ அணிக்கு கே . எல். ராகுல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடியிருக்கிறார். லக்னோ அணியில் அனுபவ வீரர்களும், புதுமுக வீரர்களும் இறங்கி உள்ளதால் அந்த அணி வலுவாக இருக்கிறது. கே.எல் . ராகுல் அணியை சிறப்பாக வழி நடத்துவார் என நம்பி உள்ளது. இதனால் முதல் வருடத்திலேயே கோப்பையை கைப்பற்றுவதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கே.எல் . ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறியது குறித்து சொன்னது : கடந்த 4 வருடங்களாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நல்ல அனுபவமாக இருந்தது வேறு அணிக்காக ஆட விரும்பியதால் பஞ்சாப் அணியில் இருந்து விலகினேன் அவ்வளவுதான். வேறு ஒன்றுமில்லை என வெளிப்படையாகக் கூறினார் கே. எல் ராகுல்.