பெற்றோர்களை எதிர்த்து ராஜகுமாரனை திருமணம் செய்து கொள்ள இதுதான் காரணம் – நடிகை தேவயானி.!

devaiyani
devaiyani

நடிகை தேவயானி சினிமா உலகில் ஆரம்பத்தில் ஐட்டம் டான்ஸர் ஆகவும் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து ஓடிக்கொண்டிருந்தார் பின் போகப்போக தனது திறமையை வெளிப்படுத்தி ஒரு கட்டத்தில் நடிகையாக அறிமுகமானார் குறிப்பாக 90 காலகட்டங்களில் அஜித், விஜய், சூர்யா போன்ற  டாப் நடிகர்கள் படங்களில் நடித்து.

தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகை தேவயானி. இப்போது இவர் வெள்ளித்திரையையும் தாண்டி சின்னத்திரையிலும் கால்தடம் பதித்து வெற்றியை கண்டவர் அந்த வகையில் சன் டிவியில் வெளியான கோலங்கள் சீரியலில் நடித்து முதலில் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது புது புது அர்தங்கள் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்துகிறார் தேவயானி. இவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகள்கள் உள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏன் வீட்டை விட்டு வந்து திருமணம் செய்து கொண்டேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் எதுவுமில்லை பிடித்து இருந்தது ஆகையால் திருமணம் செய்து கொண்டேன் என நடிகை தேவயானி தெரிவித்தார்.

மேலும் காதலுக்கு காரணம் தேவையில்லை என கூறினார் நீ வருவாய் என படத்தில் நடிப்பதற்காக ராஜ்குமார் தன்னை சந்தித்தார். அதன்பிறகு மூன்று வருடங்கள் ஆகின்றது ராஜ்குமார் இந்த படம் குறித்து தன்னிடம் பேசியது இல்லை பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் படத்தை தயாரிக்க முனைப்பு காட்டி நீங்கள் தான் நடிக்க வேண்டும் என கூறியது.