தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் முதலில் அஜிதை வைத்து தீனா என்னும் படத்தை இயக்கிய வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து விஜய், விஜயகாந்த், சூர்யா போன்ற டாப் நடிகர்களை வைத்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார்.
இப்படி திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக ஓடிக்கொண்டிருந்த ஏ ஆர் முருகதாஸ் உடன் எந்த ஒரு ஹீரோவும் சமீப காலமாக கைகோர்க்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக இவர் கடைசியாக எடுத்தார் இரண்டு, மூன்று படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தன.
அதன் பிறகு எந்த ஒரு ஹீரோவும் இவருடன் இணையவில்லை இதனால் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி வேலைகளை பார்த்து வருகிறார் இப்பொழுது கூட 1947 என்னும் படத்தை தயாரித்தது படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஏ ஆர் முருகதாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்..
ஸ்பைடர், சர்க்கார், தர்பார் ஆகிய மூன்று படங்கள் சரியாகப் போகவில்லை என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த முருகதாஸ் சரியாக திட்டமிடாமல் படபிடிப்பு நடத்தியது தான் காரணம் என்று தெரிவித்தார். ஸ்பைடர் திரைப்படத்தில் மகேஷ் பாபுவை குறைவாக காட்டியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என கூறினார்.
அதைத்தொடர்ந்து தர்பார், சர்க்கார் போன்ற படங்களும் அவசர அவசரமாக எடுக்கப்பட்டதும் தோல்விக்கான காரணமாக இருக்கலாம் என விளக்கம் கொடுத்துள்ளார். இப்படி ஏ ஆர் முருகதாஸ் பேசியது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் சர்க்கார் படம் 300 கோடி வசூல் என சொல்லப்பட்டு வந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இப்படி சொன்னது தளபதி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.