திருப்பதிக்கு டாட்டா காட்டிவிட்டு மகாபலிபுரத்தில் கல்யாணம் செய்துகொள்ள இதுதான் காரணம் – பத்திரிக்கையாளர் சந்திப்பில் புட்டு புட்டு வைத்த விக்னேஷ் சிவன்.!

wiki and nayanthara
wiki and nayanthara

தென்னிந்திய சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நீண்ட வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக இவர்களது காதல் திருமணத்தில் முடிய இல்லற வாழ்க்கையை துறக்க இருக்கின்றனர்.

வருகின்ற ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ளை போகின்றனர். இவர்களது கல்யாண நிகழ்ச்சியில் அஜித், விஜய், விஜய் சேதுபதி, சமந்தா, ரஜினிகாந்த், ராணா டகுபதி, சிவகார்த்திகேயன், கமலஹாசன், முதல்வர் ஸ்டாலின் என ஒரு மிகப்பெரிய சினிமா பட்டாளமே கலந்துகொள்ள இருக்கிறது.

மேலும் உறவினர்களும் நண்பர்களும் சூழ மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தற்போது பேட்டி கொடுத்து வருகின்றனர் அதில் அவர்கள் கூறியது முதலில் எங்களது திருமணம் திருப்பதியில் நடக்க நாங்கள் முடிவு செய்தோம்.

ஆனால் பயண தூரம் ரொம்ப அதிகம் என்ற காரணத்தினாலேயே அதை மாற்றி மகாபலிபுரம் வைத்துள்ளோம். சினிமாவில் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் பாடகராகவும் வெற்றிகண்ட விக்னேஷ் சிவன் இல்லற வாழ்க்கையை பயணிக்கிற இருக்கிறார் இது தன்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக பார்க்கிறார்.

குறுகிய வட்டாரங்கள் நண்பர்கள் உறவினர்கள் என அவர்களை வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். மீண்டும் 11ஆம் தேதி விக்கி நயன்தாரா இருவரும் பத்திரிகையாளர்களை சந்திப்போம் என கூறி உள்ளனர். விக்கி நயன்தாரா திருமண விழாவை ஒரு ஆவணபடம் போல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் எடுத்து ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.