தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமா அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தொடர்ந்து பல மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக நடித்து கலங்கி வந்த இவர் சமீப காலங்களாக வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்து வருகிறார் இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்த வருகிறது.
இவர் நடிகர் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் விக்ரம்.விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் சேதுபதி அமீர்கானுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அமிர்தகனுடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஏன் நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திலிருந்து விலகினார் என்பதற்காக அவருக்கு பதிலாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ஃபாரெஸ்ட் கம்ப் அதிகாரப்பூர்வமான ரீமேக்கான லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இதில் அமீர்கானுடன் இணைந்து கரீனா கபூர் கான், மோனா சிங் மற்றும் நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்க இருந்தது ஆனால் சில நாட்களிலேயே இந்த திரைப்படத்திலிருந்து இவர் விலகிவிட்டார். இதற்கு பதிலாகத்தான் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யா இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகியது குறித்து நாக சைதன் விளக்கம் அளித்துள்ளார் .
அதாவது மற்ற படங்களில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டியது இருந்ததால் போதுமான கால்சீட் அவரால் தர முடியாத காரணத்தினால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதனை தயாரிப்பாளர் தரப்பிடம் எடுத்துக் கூறிவிட்டு இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினாராம். மேலும் லால் சிங் சத்தா திரைப்படத்தினை ரீமேக் செய்யப்பட்ட ஃபாரெஸ்ட் கம்ப் படத்திற்க்கு 6 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
லால் சிங் சத்தா திரைப்படத்தினை தமிழ்நாட்டில் நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையிலும் திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.