நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலா எப்பொழுதுமே வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க கூடியவர் அந்த வகையில் இந்த திரைப்படமும் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க நடிகர் பாலா மீனவர்கள் சம்பந்தப்பட்ட படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்த பல்வேறு டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் இவருக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதாக அடிக்கடி தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் சூர்யா அவ்வபொழுது பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எந்த பிரச்சனையும் இல்லை என புகைப்படத்தின் மூலம் தெளிவுபடுத்தி வருகிறார்.
இப்படி இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சூர்யாவை அடிக்கடி ஓட சொல்லி இருக்கிறார் என்ற செய்தியை பெரிய அளவில் பேசப்பட்டது தற்போது அதற்கான காரணமும் கிடைத்துள்ளது அதாவது இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் சூர்யா கீர்த்தி ஷெட்டியை துரத்துவது போல காட்சி எடுக்கப்பட்ட இருந்ததாம் இதற்காக தான் சூர்யாவை அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் ஓட சொல்லி இருக்கிறார்.
அந்த காட்சியை எடுக்கும் போது நடிகை கீர்த்தி ஷெட்டி ஒரு இந்திய வீராங்கனை போல செம்ம வேகமாக ஓடி உள்ளார் பின்னால் நடிகர் சூர்யா அவரை துரத்துவது போல எடுக்கப்பட்டது ஆனால் சூர்யாவால் அந்த அளவிற்கு வேகமாக ஓட முடியவில்லை காரணம் கொரோனா பாதிப்பிற்கு பிறகு அவரால் அந்த அளவிற்கு சரியாக ஓட முடியவில்லையாம் எப்படியோ அந்த காட்சியை எடுத்து விட்டதாக பிரபல பத்திரிகையாளர் கூறினார்.