அப்பவும் சரி, இப்பவும் சரி என்னுடைய “ரியல் ஹீரோ” இவர்தான் – நடிகை அனிகா பேச்சு

anikha
anikha

திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த பலரும் பருவ வயதை எட்டிய பிறகு குணச்சித்திர கதாபாத்திரம் அல்லது ஹீரோயின்னாக நடித்து அசத்துகின்றனர் அந்த வகையில் நடிகை அனிகா சுரேந்தர் குழந்தை நட்சத்திர நடித்து இப்போ ஹீரோயின்னாக ஜொலிக்கிறார். முதலில் மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு..

படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து அசத்தினார். இவர்களுடைய காம்பினேஷன் சிறப்பாக இருந்த காரணத்தினால் சிறு இடைவேளைக்கு பிறகு விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும்  அஜித்துக்கு மகளாக அனிகா நடித்து அசத்தினார்.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் அவருக்கு பேரையும், புகழையும் பெற்று தந்ததால் அவருடைய மார்க்கெட் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிகமாகினர் இதனால் படங்களில் ஒரு பக்கம் நடிக்க.. மறுப்பக்கம் சமூக வலைதள பக்கங்களில் தினமும் புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்.

இப்படியே தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்த அனிகாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஹீரோயின்னாக அவதாரம் எடுத்தார் அண்மையில் கூட இவர் “ஓ மை டார்லிங்” என்னும் படத்தில் நடித்தார். இதில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தாலும் அதிகமான லிப்லாக் காட்சிகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் தற்போது பிஸியாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனிகா சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்த பேட்டியில் உங்களுடைய ரியல் லைஃப் ஹீரோ யார் என கேட்டுள்ளனர் அதற்கு அனிகா “எனது அம்மா தான்” மேலும் உங்களுக்கு பிடித்த உணவு என்ன என கேட்டதற்கு பிரியாணி மற்றும் பாஸ்தா என நடிகை அனிகா கூறி இருக்கிறார். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.