சினிமா உலகில் அஜித், விஜயின் உண்மையான முகம் இது தான்.! புட்டு புட்டு வைத்த நடிகர் யுகேந்திரன்.! வைரல் நியூஸ்.

ajith
ajith

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், விஜய் இருவரும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுப்பதாக தமிழ் சினிமா உலகில் யார் ரஜினியின் இடத்தை பிடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அஜித் சமூக அக்கறை உள்ள படங்கள் மற்றும் ஆக்சன் போன்ற படங்களை கொடுப்பதால் தற்போது பெண் ரசிகர்களை அவர் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெரும் என பார்க்கப்படுகிறது.

அதுபோல விஜயும் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இளம் இயக்குனருக்கு கொடுத்து உள்ளதால் இந்த திரைப் படத்திற்கான எதிர்பார்ப்பும் வேற லெவல் இருந்துவருகிறது அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் பல முன்னணி ஜாம்பவான்கள் களமிறங்கி உள்ளதால் இந்த படமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜீத் விஜயுடன் நடித்த யுகேந்திரன் வெளிப்படையாக இருவர் பற்றியும் கூறியுள்ளார் அவர் கூறிய சுவாரஸ்யமான பதில்கள் இதோ. அஜீத், விஜய் இருவருமே முன்னணி நடிகர்கள் என்பது நாம் யாரும் மறுத்துவிட முடியாது அவர்கள் இருவரும் வெவ்வேறு குணம் உடையவர்கள் மேலும் அவர்கள் நடிக்கும் ஸ்டைல் கூட வேறு மாதிரியாகத்தான் இருக்கும்.

நடிகர் அஜித் மனதில் தோன்றுவதை அப்படியே சொல்லக்கூடியவர் அது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக சொல்லி விடுவார் அது பிடித்து இருந்தாலும் சரி பிடிக்காவிட்டாலும் சரி இதுதான் என்னுடைய பதில் என ஒரேடியாக கூறுவார் ஆனால் விஜய்யோ தன்னை யாரும் தப்பாக நினைத்துவிட கூடாது என்பதற்காக மிக அமைதியாக ஒவ்வொன்றையும் பார்த்து அடி எடுத்து வைப்பார் என கூறினார்.