தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் கடைசியாக நடித்த வாரிசு படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
லியோ படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் சைலன்டாக முடிந்ததை எடுத்து இரண்டாவது கட்டர் ஷூட்டிங் காஷ்மீரில் இரண்டு மாதங்களாக கடும் குளிர் என்று கூட பார்க்காமல் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அங்கேயும் ஷூட்டிங் முடிந்தது மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருப்பதாக படக்குழு சொல்லி உள்ளது.
தொடர்ந்து லியோ திரைப்படம் குறித்தும் விஜய் குறித்தும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அப்படி சில வருடங்களுக்கு முன்பு விஜய் மற்றும் மனைவி சங்கீதா பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் சொல்லி உள்ளது என்னவென்றால் சங்கீதா இட்லி சமைத்து இருக்க சாப்பிட உட்காரும் விஜய் இட்லியா என கேட்டுவிட்டு..
பிறகு தோசை சாப்பிட வேண்டும் போல இருக்கு என தனக்குத்தானே தோசையை ஊற்றி கொள்கிறார். பிறகு சங்கீதா தோசைனா நல்லா சாப்பிடுவாரு அதே மாதிரி நாளைக்கு பிரியாணி செய்ய போறேன்னு சொன்னால் இன்னைக்கு நைட்ல இருந்து வைத்த காலியா வச்சு பாரு என தெரிவித்துள்ளார். மேலும் ஈவினிங் ஆறு அல்லது ஏழு மணிக்கு எப்பவும் குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பண்ணுவாரு எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது வீடியோவை பார்த்த தளபதி ரசிகர்கள் இரண்டு பேருமே செம்ம க்யூட் ரெண்டு பேரும் இப்படியே பல வருஷம் வாழனும் ஜாலியாக இருக்கன்னும் என கூறி அந்த வீடியோவிற்கு லைக்குகளை அள்ளி வீசி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) March 26, 2023