ரஜினிக்கும், சத்தியராஜிக்கும் இடையே இருக்கும் பிரச்சனை இதுதான் – உண்மையை பிரஸ்மீட்டில் உடைத்த நடிகர் சிபிராஜ்.!

rajini-and-sathyaraj
rajini-and-sathyaraj

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருவர் சிபிராஜ். இவர் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சத்யா மற்றும் ஒரு சில படங்கள் வெற்றியை ருசித்தன.

இப்படி இருக்கின்ற நிலையில் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளிவர உள்ள திரைப்படம்தான் மாயோன். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த படமாகஉருவாகி உள்ளதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்து இழுக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது அண்மையில் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சிபி கலந்து கொண்டார் அப்பொழுது உங்களது அப்பா சத்யராஜ் மற்றும் ரஜினிக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா என கேள்வி எழுப்பினார் அதுகுறித்து அவர் சொன்னது.

ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சிவாஜி இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக தனது அப்பா சத்யராஜை அணுகினார்கள் ஆனால் அப்பொழுது அவர் பல்வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முடியாமல் போனது மிகப் பெரிய ஒரு விஷயமாக ஊடகங்கள் பெரிதுபடுத்தின.

மேலும் ரஜினி படத்தின் டைட்டில் ரங்கா என்ற பெயரை எனது படத்தில் வைக்கப்பட்டது. அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினி ரொம்ப கோபப்பட்டதாகவும் பல வதந்திகள் பரவின அது முழுக்க முழுக்க தவறு எனவும் குறிப்பிட்டிருந்தார் நடிகர் சிபி.