தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் தனுஷ் இவரைப் போலவே இவரது குடும்பத்தில் இருப்பவர்களும் சினிமா உலகில் சிறப்பாக ஜொலிக்கின்றனர் இவரது அண்ணன் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவும் செய்து வருகிறார்.
இதனால் அவரது பயணம் சிறப்பாக இருக்கிறது தனுசுக்கும், செல்வராகவனுக்கும் முன்பாகவே தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களை இயக்கியவர் அவரது அப்பா கஸ்தூரி ராஜா. சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வருகிறது தனுஷின் குடும்பம். இப்படி ஓடி கொண்டிருந்த நிலையில் நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் பின் திருமணம் அரங்கேறியது.
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் பணியாற்றினார் நடிகர் தனுஷ் படங்களில் நடித்து வருகிறார் அவரது மனைவி ஐஸ்வர்யா படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் ஒரு பக்கம் சிறப்பாக பயணிக்க மறுபக்கம் குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக வாழ்ந்தனர்.
இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர் மூத்த மகனின் பெயர் யாத்ரா, இளைய மகனின் பெயர் லிங்கா. மூத்த மகன் யாத்ராவுக்கு தற்போது 15 வயது ஆகிறது இந்த நிலையில் இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்து பெற்ற பெரிய போவதாக ஒரு அறிக்கை ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தனுஷின் அப்பாவும், டைரக்டரான கஸ்தூரிராஜா இச்செய்தி குறித்து பேசியுள்ளார் இருவருக்குமிடையே விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பேசாமல் இருக்கின்றனர் ஒரு சின்ன சண்டை தான் குடும்பத்தில் எப்போதும் சின்ன சின்ன சண்டைகள் வந்து போகும் அது இயல்பு.
தற்போது தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் சண்டை வந்து உள்ளது இது குடும்ப சண்டை வேறு எதுவும் இல்லை என கூறினார். மேலும் பேசிய தனுஷின் அப்பா இப்பொழுது தனுஷும், ஐஸ்வர்யாவும் சென்னையில் இல்லை ஹைதராபாத்தில் இருக்கின்றனர் நான் போனில் தொடர்பு கொண்டு பேசி சில அறிவுரைகளை கொடுத்து உள்ளேன் என சொன்னார்.