சினிமா உலகில் திறமை இருப்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரசாந்த். முதலில் காதல் சம்மந்தப்பட்ட படங்கள் வெற்றியை கொடுத்தன ஆனால் ஒரு கட்டத்தில் தனது ரூட்டை மாற்ற ஆரம்பித்தார்.
அதன்பின் நடிகர் பிரசாந்த் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வி படங்களாக மாறின இதனால் அவருக்கு காலப்போக்கில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போயின இதனால் நடிகர் பிரசாந்த் பின்னால் இருந்த நடிகர்களான அஜித் விஜய் முன்னேறி தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர் இருப்பினும் நடிகர் பிரஷாந்த் சினிமா உலகில் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் என எண்ணி தற்போது வரை கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து வருகிறார்.
குறிப்பாக தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இவர் அந்தகன் என்ற ரீமேக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த் உடன் கைகோர்த்துள்ள டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகை சிம்ரன் பிரசாந்துடன் இணைந்து இந்த படத்தில் நடித்து உள்ளார்.
இவர்கள் இருவரும் இதற்கு முன்பாக 5 படங்களில் நடித்துள்ளார். அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகவே மாறி இருக்கின்றன அந்த காரணத்தினால் 6வது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர் இந்த படமும் வெற்றிப் படமாக இருக்கும் என இருக்கும் என்பதே பலரின் கணிப்பாக இருக்கிறது.
இந்தப்படம் சிம்ரனுக்கும் சரி பிரசாந்துக்கும் சரி சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. இந்த படம் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீஸ்ஸாக இருப்பதால் நிச்சயம் இந்த படமும் ரசிகர்களை கொண்டாட வைத்து கருதப்படுகிறது.
இந்த படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் அவர்களே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஏற்பட்ட பிரசாந்த் மற்றும் சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் அப்பொழுது சிம்ரன் சொன்னது பிரஷாந்த் ஒளிப்பதிவு மற்றும் கேமரா விஷயத்தில் கெட்டிக்காரர் என குறிப்பிட்டார்கள் மேலும் பேசிய சிம்ரன்நடிகர் பிரசாந்த்துக்கு சினிமாவில் பொருத்தமான ஜோடி என்றால் அது ஐஸ்வர்யா ராய் என கூறினார் அதேபோல சிம்ரன்னு சிறந்த ஜோடி என்றால் அது விஜய் தான் என பிரசாந்த் கூறினார்.