திருப்பாச்சி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட “தலைப்பு” இதுதான்.? இயக்குனர் பேரரசு வெளிப்படை.!

perrasu-
perrasu-

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அங்கு முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார் இப்பொழுது கூட இவர் தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி 67 இல் நடிக்கப் போகிறார் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் தற்போது கதையை விறுவிறுப்பாக எழுதி வருகிறாராம் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என சொல்லப்பட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வளம் வருபவர். இவர் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் திருப்பாச்சி. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து திரிஷா, மாளவிகா கோட்ட சீனிவாச ராவ், பசுபதி, பெஞ்சமின், நெல்லை சிவா, எம் எஸ் பாஸ்கர், ஆரியன், லிவிங்ஸ்டன் என பலர் நடித்து இருந்தனர்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இந்த படம் விஜய்க்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தற்போது நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பேரரசு கலந்து கொண்டார் அப்பொழுது திருப்பாச்சி படம் குறித்து பேசினார் அதில் அவர் சொன்னது திருப்பாச்சி படத்திற்கு முதலில் 150 டைட்டில் எழுதினோம்.

அதில் கிரிவலம் என்ற டைட்டில் தயாரிப்பாளருக்கும் விஜய்க்கும் ரொம்ப பிடித்தது ஆனால் இந்த படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் வேறு பெயரை தேடினோம் அப்படித்தான் தேடிக் கொண்டிருக்கும் பொழுது தாஜ்மஹால் படத்தில் திருப்பாச்சி அருவாள என ஒரு பாடல் வரும் அப்பொழுதுதான் நாங்கள் அதை நோட் செய்து திருப்பாச்சி என்ற டைட்டில் வைத்தோம் என கூறினார்.