Leo : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து லியோ படத்தை எடுத்துள்ளார் படம் மிகப்பெரிய ஆக்சன் படமாக வந்துள்ளது. தளபதி விஜய் உடன் கைகோர்த்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன்..
அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், திரிஷா, பிக்பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த் என மிகப் பெரிய ஒரு திரை பட்டாளமே நடித்துள்ளது. படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பாகவே ரசிகர்களை கவர்ந்து இழுக்க படக்குழு அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ட்ரெய்லரையும் வெளியீட்டு மிரட்டியது.
ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஆக்சன் தான் படமும் ஆக்ஷன் ஆக இருக்கும் என தெரிய வருகிறது. ஒரு பக்கம் அப்டேட்டுகள் வர மறுபக்கம் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி வேலை பார்த்து வருகிறது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படம் குறித்தும் விஜய் குறித்தும் பேசி வருகிறார். அப்படி பேட்டி ஒன்றில் அவர் லியோ தலைப்பு குறித்து பேசிய உள்ளார். லியோ படத்தின் கதை எழுதும் பொழுதே இந்த படத்திற்கு ஆண்டனி என பெயர் வைக்க முடிவு செய்து இருந்தோம்.
ஆனால் கடைசி நேரத்தில் மார்க் அண்டனி போன்ற தலைப்புகளில் படங்கள் ரிலீஸ் ஆனதால் பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம் கடைசியாக லியோ பெயரை தேர்வு செய்தோம் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.