தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சமீபத்தில் அதிக அளவு ரீமேக் திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கிறது அதிலும் மலையாளத்தில் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படங்கள் பலவும் தமிழ் சினிமாவில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இப்படிப்பட்ட திரைப்படங்களை இயக்கவும் தயாரிக்கவும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் விசித்திரன் கூகுள் கட்டப்பா நெஞ்சுக்கு நீதி போன்ற பல்வேறு திறை படங்களுமே ஹிட்டானா திரைப்படங்கள்தான்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி விசித்திரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. ஆனாலும் இதில் ஒரு சில கதையம்சமுள்ள திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது.
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் இயக்குனர்களும் அதன்பிறகு இதுபோன்ற திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது கிடையாது அந்தவகையில் ஒரு திரைப்படம் எடுக்கும் பொழுது அவை விறுவிறுப்பாக இருந்தாலும் படம் வெளியாகிய பிறகு ரசிகர்கள் கொடுக்கும் கமெண்டை பொருத்துதான் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால் ரீமேக் செய்யப்படும் திரைப்படங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றதன் காரணமாக கண்டிப்பாக இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தயாரிப்பாளர்கள் முழுமூச்சாக இறங்க ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் ரீமேக் உரிமையை வாங்குவதற்கும் பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகர்களும் கூட இது போன்ற திரைப்படங்களில் நடிக்க பெருமளவு ஆர்வம் காட்டுவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் கதையம்சம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.
ஆனால் மிக விரைவாக தமிழ்சினிமாவில் ரீமேக் திரைப்படம் உருவாகுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ரீமேக்காகும் திரைப்படங்கள் குறிப்பாக சமீபத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.