தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது கொடிக்கட்டி பறந்து வரும் ஒரு நடிகர் என்றால் அது தல அஜித் தான் இவர் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியாகி மெகா ஹிட் கொடுத்த திரைப்படம்தான் வேதாளம். இப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிகை லட்சுமிமேனன் நடித்து இருப்பார்.
அதேபோல அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசனும் நடித்திருப்பார் மேலும் இத்திரைப்படத்தில் கோவை சரளா மற்றும் சூரி பாலா சரவணன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்நிலையில் இந்த திரைப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த தெலுங்கு திரைப்படத்தில் தல அஜித்திற்கு பதிலாக சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இந்நிலையில் தன்னுடைய 150வது திரைப்படத்தை கத்தி திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இத்திரைப்படத்தை தொடர்ந்து பாதியாக குறைக்க நரசிம்ம ரெட்டி மற்றும் ஆச்சார்யா ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய 153வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க ஆரம்பித்துள்ளது. இத் திரைப்படமானது மலையாளத்தில் வெளியான லூசிபர் திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் தான் இயக்கவுள்ள இந்த படத்தை முடித்த பிறகு வேதாளம் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம்.
முதலில் இந்த ரீமேக் திரைப்படத்தில் பவன் கல்யாண் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் அவர் அரசியலில் கொஞ்சம் பிஸியாக இருப்பதன் காரணமாக அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போயிற்று இந்நிலையில் சிரஞ்சீவி இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியை விட முக்கிய கதாபாத்திரம் என்னவென்றால் தங்கை கதாபாத்திரம் தான் எனவே இதில் தங்கையாக நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் முதலில் கேட்டிருந்தார்கள் ஆனால் அவர் 3 கோடி சம்பளம் கேட்ட ஒரே காரணத்தினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.