இந்த ஒரே காரணத்தால் தான் கமலஹாசன் உடன் நான் நடிக்கவில்லை நதியா ஓபன் டாக்.!

nadhiya-kamal
nadhiya-kamal

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் நடிகை நதியா. இவர் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நதியா கமல்ஹாசன் உடன் ஒரு படத்தில் கூட இதுவரைக்கும் நடித்ததில்லை.

இதற்கான காரணத்தை பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அதாவது நதியா வந்த புதிதில் ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகைகளும் ஏராளமானவரை கவர்ந்து உள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் நடிகை நதியா.

பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நடிகை நதியா அவர்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது.

தற்போது நதி அவர்கள் தொடர்ந்து முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நதியா கமலஹாசன் உடன் நடிக்காதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு கமல்ஹாசன் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு பலமுறை வந்ததுண்டு. ஆனால் அந்த சமயத்தில் வேறொரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் கமல்ஹாசன் உடன் நடிக்க முடியாமல் போனது.

சினிமாவில் பல நடிகைகள் கமல்ஹாசன் உடன் நடிக்க வேண்டும் என்று போட்டி போட்டு வருகின்றனர் ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியாமல் போனது இதனால் நான் பலமுறை நினைத்து பார்த்ததுண்டு. அதுமட்டுமல்லாமல் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது எப்படியாவது அந்த படத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தேன் ஆனால் அந்த முயற்சி எடுபடவில்லை இதனால் நான் கமல்ஹாசன் உடன் நடிக்காமல் போனது என்று கூறியுள்ளார்.

மேலும் பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் உடன் முதலில் நடிக்க இருந்தது நதியா தான் என தகவல் வந்தது அது உண்மையா என அவரிடம் கேட்டபோது அது முற்றிலும் பொய் எனக்கு பாபநாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.